சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி!

Report Print Vethu Vethu in போக்குவரத்து

சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு நேரடியாக விமானம் மூலம் வந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திற்கு இடையிலான நேரடி பருவகால விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுவிட்சர்லாந்தின் முன்னணி விமான நிறுவனமான Edelweiss Air விமான சேவை, இந்த பயண நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

அடுத்த மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு வரை மே மாதம் வரை இந்த நேரடி சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் 3ஆம் திகதி முதல் சூரிச்சிலிருந்து நேரடியாகத் தடையில்லா விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

314 பயணிகளுடன் பயணிக்க கூடிய Edelweiss எயார்பஸ் A340-300 என்ற விமானம் வாரம் இரண்டு முறை பயணிக்கவுள்ளது.

அதற்கமைய வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடியாக கொழும்பு மற்றும் சூரிச் இடையே பயணிக்கவுள்ளது.

இந்த சேவை காரணமாக சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்கள் இலகுவாக நாட்டுக்கு வந்து செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளமையால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.