கொழும்பு நோக்கிய விமான சேவைகளை ஆரம்பிக்கும் சுவிஸ் விமான நிறுவனம்!

Report Print Murali Murali in போக்குவரத்து

சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல் வைஸ் விமான சேவைகள் நிறுவனம் கொழும்பு நோக்கி விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடெல் வைஸ் விமான சேவை நிறுவனம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஏனைய கண்டங்களில் உள்ள நகரங்களுக்கும் விமான சேவைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கொழும்பு நோக்கி விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகாலத்தில் இலங்கையை நாடும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனம் சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers