ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்

Report Print Kumar in போக்குவரத்து

கிழக்கு மாகாணத்தில் சம்பள உயர்வினை வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணிப் பகிஸ்கரிப்பு நேற்று முதல் முடிவுக்கு வந்தது.

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் மாலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வந்த இப்பணி பகிஸ்கரிப்பானது நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.

இப்பணிப் பகிஸ்கரிப்பினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் நேற்று, போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் சாரதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு என அமைச்சர் விடுத்த வேண்டுகோளையேற்ற ஊழியர்கள் நேற்று மாலை முதல் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும் சம்பள உயர்வு வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததாகவும் அதன் காரணமாக புதிய அரசாங்கம் சம்பள அதிகரிப்பினை செய்யவேண்டும் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Latest Offers