பொதுப் போக்குவரத்தில் ஏற்படபோகும் புரட்சி! Hybrid பேருந்துகளை வாங்க திட்டம்

Report Print Murali Murali in போக்குவரத்து

Hybrid பேருந்துகளை பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவில் இருந்து பேருந்துகளை இறக்குமதி செய்வது குறித்து முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் இன்று கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் நவீன ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீனா செற்றிருந்தேன். அங்குள்ள நிறுவனங்களுக்கும் சென்றிருந்தேன். அங்கு ஹைட்ரஜன் பேருந்து, Hybrid பேருந்து மற்றும் மின்சார பேருந்துகள் இருக்கின்றன.

இந்நிலையில் Hybrid பேருந்துகளை இறக்குமதி செய்வது குறித்து பேசிவருகின்றோம். எனினும், மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போதிய நிதி இல்லை.

சீனாவில் இருந்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் 28 வாரங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் இருந்தும் பேருந்துகளை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers