கொழும்பு - திருகோணமலை பஸ்ஸின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in போக்குவரத்து

கொழும்பு - திருகோணமலை செல்லும் பயணிகள் பஸ்சொன்றில் அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியதால் பஸ்ஸின் உரிமையாளரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

காலி வீதி, கொழும்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு சொந்தமான பஸ் ஒன்று கொழும்பு திருகோணமலை மார்க்கமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் குறித்த பஸ்ஸினை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போதே தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, மற்றும்ஆண்டு அனுமதிப்பத்திரம் இல்லாமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பஸ்ஸின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers