இலங்கை போக்குவரத்து துறையில் ஏற்படவுள்ள புரட்சி!

Report Print Vethu Vethu in போக்குவரத்து

இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாட்டுக்காக மேலும் 1000 பேருந்துகளை சேர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

காற்றுச்சீரமைத்தல் கொண்ட ஆயிரம் ஹைட்பிரிட் பேருந்துகளும் சாதாரண டீசல் பேருந்துகளும் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பகட்டமாக 500 பேருந்துகளை கொண்டு வருவதற்கு தற்போது விலை மனு கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய 54-56 ஆசங்கள் கொண்ட 400 பேருந்துகளும், 36 ஆசனங்கள் கொண்ட 100 பேருந்துகளும் கொண்டு வரப்படவுள்ளது.

பாணந்துறையில் இருந்து வெயங்கொடை வரை மின்சார ரயில் சேவை ஒன்று ஆரம்பிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடன் உதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.