முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவது கட்டாயம் - யாழ். மாநகர மேயர்

Report Print Mohan Mohan in போக்குவரத்து

யாழ். மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

2018.12.31 இன் பின்னர் யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என அறியத்தரப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்று இம்மானுவேல் ஆர்னோல்ட் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31ஆம் திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.