இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த விபத்து!

Report Print S.P. Thas S.P. Thas in போக்குவரத்து

பொலனறுவை தலுகான பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என அப்பகுதிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவை தலுகான பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டதும் வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த பஸ்ஸின் கீழே அகப்பட்டுள்ளது.

உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், உயிரிழந்த இளைஞர்களையும் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

விபத்தில் பலியான இளைஞர்கள் அடையாளம் காண்பதற்காக சடலங்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார் தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.