வவுனியாவில் விபத்து! தாயும் மகனும் படுகாயம்

Report Print Theesan in போக்குவரத்து

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வெள்ளைக்கோட்டினைக் கடந்து பாதி தூரம் சென்றபோது அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி சென்ற பட்டரக வாகனம் மோதியுள்ளது.

தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த இரண்டு வயது சிறுவன் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் காயமடைந்த சின்னப்பு புன்சலாமேரி 29 வயது தலையிலும் கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இவ்விபத்து தொடர்பாக ரயர் கடையிலுள்ள சி.சி.ரி கமராவில் விபத்தை பார்வையிட்ட பொலிசார் பட்டா வாகனத்தின் சாரதியையும், வாகனத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.