விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இந்தியாவுக்கு

Report Print Steephen Steephen in போக்குவரத்து

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சொந்தமான சுங்க தீர்வையற்ற (Duty free) வர்த்தக நிலையங்களை இந்தியாவின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் அனுமதியும் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

விமான சேவை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நலன்புரி நடவடிக்கைகளுக்கு வருவாய் ஈட்டி தந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், வாகன தரிப்பிடங்கள் உட்பட விமான நிலைய நிர்வாகத்தின் கீழ் இருந்த சில இடங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், விமான நிலையத்தை படிப்படியாக தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.