நெருக்கடிகளை எதிர்நோக்கிய இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Report Print Sujitha Sri in போக்குவரத்து

இலங்கையில் இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சேவைகள் சீரடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு நேற்றைய தினம் பிறந்திருந்த நிலையில் பெரும்பாலும் தமிழர்களும், சிங்களவர்களும் சுப வேளைகளில் தமது கடமைகளை ஆரம்பிக்கின்றமை வழக்கமாகும்.

இதனை முன்னிட்டு நேற்று இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகள் மட்டுமல்லாது தனியார் பேருந்துகளும் மிகவும் குறைந்த அளவிலேயே சேவைகளில் ஈடுபட்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கையின் பேருந்து பயணிகள் பலரும் பயணங்களை மேற்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்படி அறிவிப்பை இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ளது. அத்துடன் பெரும்பாலான தனியார் பேருந்துகளும் இன்று தமது சேவைகளை ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும், புத்தாண்டுக்காக தூர இடங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.