யாழ்.பலாலி வீதி உரும்பிராயில் கோர விபத்து: 19 வயது இளைஞன் பலி

Report Print Suthanthiran Suthanthiran in போக்குவரத்து

யாழ்.பலாலி வீதி உரும்பிராயில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை 4.15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேருக்கு நேர் வந்த உந்துருளியும், முச்சக்கர வண்டியொன்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றுடன் ஒன்று, மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான இருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த யோகேந்திரன் தமிழரசன் ( வயது-19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers