கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பட்ட விமானம்

Report Print S.P. Thas S.P. Thas in போக்குவரத்து

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு சீரற்ற காலநிலை காரமாண மத்தல விமான நிலையத்திற்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers