10 நாட்களில் 81 பேர் பலி, 450 பேர் காயம்!

Report Print Murali Murali in போக்குவரத்து

கடந்த பத்து நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

"இந்தப் பத்து நாட்களில் 700 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. விபத்துக்களில் 450 பேர் காயமடைந்துள்ளார்கள்.

அவர்களில் 186 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள். மது போதையில் வாகனம் செலுத்திய சுமார் ஆயிரம் சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

வீதி விதிமுறைகளை மீறிய 45 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers