புகையிரத பிரயாணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து இரவுநேர சேவைகளும் ரத்து

Report Print Sujitha Sri in போக்குவரத்து

இலங்கையில் இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை நான்கு மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள சந்தர்ப்பத்தில் புகையிரத கட்டுப்பாட்டு அறை முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று இரவு புறப்படவிருக்கும் அனைத்து இரவுநேர புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று காலை புகையிரத சேவைகள் ஓரளவு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் புகையிரத சேவைகள் வழமைக்கு கொண்டு வரப்படும் என இன்று காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் தனியார் பேருந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers