சிறுமியொருவரை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டிச் சாரதி கைது

Report Print Mubarak in போக்குவரத்து

திருகோணமலை கந்தளாய் பகுதியில் தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமியொருவரை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(13) இடம் பெற்றுள்ளது. வாத்தியாகம, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பத்து வயதுடைய சிறுமியொருவர் வீட்டிலிருந்து ஆங்கில பாட தனியார் வகுப்பிற்காக சென்ற போது வேகமாக சென்ற முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியால் சென்ற சிறுமியுடன் மோதியதில் சிறுமி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

சந்தேக நபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.