வவுனியா ஓமந்தையில் விபத்து! மூவர் படுகாயம்

Report Print Theesan in போக்குவரத்து

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (30.05) மதியம் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஓமந்தை ஏ9 வீதியில் (பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில்) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இதன்போது குறித்த விபத்தில் 68 வயதான திலகவதி என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை காமடைந்த மூவரில் ஒருவர் அனுராதபுரத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.