நாளை நள்ளிரவு முதல் இலங்கையில் மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல்

Report Print Sujitha Sri in போக்குவரத்து

தொடருந்து தொழிற்சங்கங்கள் நாளைய தினம் நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டமானது சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் தொடருந்து சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் இணையவுள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட தொடருந்து பயணிகளான மக்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.