வவுனியாவில் புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழப்பு: புகையிரத இயந்திரமும் செயலிழந்தது

Report Print Thileepan Thileepan in போக்குவரத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் வவுனியாவில் நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன.

குறித்த கடுகதி புகையிரதம் இன்று மாலை 5.45 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது புகையிரத கடவையை ஊடறுத்துச் சென்ற மாட்டுக் கூட்டத்தில் மோதியது. இதில் 4 மாடுகள் உயிரிழந்துள்ளன.

அத்துடன், குறித்த விபத்தினால் புகையிரத இயந்திர பகுதியும் செயலிழந்தமையால் புகையிரத பயணமும் நிறுத்தப்பட்டு திருத்த வேலை இடம்பெற்ற பின்னரே பயணத்தை தொடர்ந்தது. இதனால் ஒரு மணித்தியாலயம் தாமதமாகவே புகையிரதம் பயணித்தது.

இதேவேளை, குறித்த பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் இதே புகையிரதம் மோதி 6 மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers