கொழும்பில் சாரதியின் ஆபத்தான செயற்பாடு! இவ்வளவு பெரிய தண்டனை தொகையா?

Report Print Vethu Vethu in போக்குவரத்து

கொழும்பில் குடிபோதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட - ஹெட்டியாவத்தை பகுதியில் தனியார் பேருந்தை ஓட்டிய சாரதியே இவ்வாறு கைது செய்யப்பபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவருக்கு 57500 ரூபாய் அபராதமாக விதிப்பதற்கு நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.

எனினும் குறித்த பணத்தை செலுத்த முடியாமையினால் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019/10 போக்குவரத்து திருத்தத்தின் கீழ் மிகக்கூடிய அபராதம் இதுவென பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

42 வயதான குறித்த தனியார் பேருந்து சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாகவும், பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் வாகனம் ஓட்டியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடம் காப்புறுதி சான்றிதழ் உட்பட ஏனைய பத்திரங்கள் எதுவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.