வவுனியாவில் பாடசாலை மாணவர்களை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்

Report Print Thileepan Thileepan in போக்குவரத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள் மோதி தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (12.07) மாலை இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புகையிரத நிலைய வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவர்கள் பண்டாரிக்குளம் நோக்கி பாதையை ஊடறுத்து செல்ல முற்பட்ட சமயத்தில் புகையிரநிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீதியினை கடக்க முயன்ற துவிச்சக்கரவண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸ் காவல் அரணில் காவலில் நின்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.