திருகோணமலையில் கார் விபத்து: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

Report Print Abdulsalam Yaseem in போக்குவரத்து

திருகோணமலை - அனுராதபுரம் பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இன்று (17) பிற்பகல் 3.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த கார் மாட்டுடன் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

காரில் வருகைதந்திருந்த எவருக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும், காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.