பிரதான வீதியில் விழுந்த பாரிய மரத்தால் மூன்று மணித்தியாலங்கள் வரை தடைப்பட்ட போக்குவரத்து

Report Print Thirumal Thirumal in போக்குவரத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, பிட்டவல பகுதியில் இன்று அதிகாலை பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியினூடான போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பம் சேதமடைந்து, மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததன் காரணமாக அப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை வீதியிலிருந்து மரம் அகற்றப்பட்டுள்ள போதும், மின் கம்பிகள் மற்றும் மின் கம்பம் பிரதான வீதியில் கிடப்பதால் அந்த வீதியூடாக ஒரு வழி போக்குவரத்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்து தடை காரணமாக கொழும்பு மற்றும் அவிசாவளை நோக்கி செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers