கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 11ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டது விமான சேவை

Report Print Steephen Steephen in போக்குவரத்து

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கான தனது விமான சேவையை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

கேரளா மாநிலத்தின் கொச்சினில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக எதிர்வரும் 11ஆம் திகதி பிற்பகல் 3 மணி வரை கொச்சின் விமான நிலையத்திற்கான விமான சேவையை நிறுத்தி வைப்பது என ஸ்ரீலங்கன் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா, கர்நாடகா, மஹாராஸ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.