சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்கள் பாதிப்பு

Report Print Ajith Ajith in போக்குவரத்து

புதன்கிழமை இரவு முதல் இன்று வரை நாடு முழுவதும் வீசிய பலத்த காற்று காரணமாக 1,124 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன் 1,124 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக இரத்தினபுரி, வவுனியா, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கம்பஹா, களுத்துறை, காலி, குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும். இத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான இழப்பீட்டை கிராமசேவகர் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த சில தினங்களுக்கு நாடு மற்றும் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் குறையலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"வடக்கு, வட-மத்திய , வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் குறிப்பாக பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

மேற்கு, மத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி , மாதரை மாவட்டம் ஆகிய இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழைப் பெய்யக்கூடும்.