யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேம்படி சந்தியில் சற்று முன்னர் இலங்கை அரச பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அவ்விடத்திலிருந்தவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.