கொழும்பு- கொச்சின் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Report Print Aasim in போக்குவரத்து

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு-கொச்சின் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத மழை வெள்ள அனர்த்தம் காரணமாக இந்தியாவின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்கள் கடந்த ஒரு வாரகாலமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் இன்று தொடக்கம் இந்தியாவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன.

அதன் காரணமாக கடந்த ஆறாம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு-கொச்சின் விமான சேவைகள் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று கட்டுநாயக்கவிலிருந்து கொச்சின் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

Latest Offers