விசேடமாக வடிவமைக்கப்பட்ட இரயில் பெட்டிகள் சீனாவில் இருந்து இறக்குமதி

Report Print Ajith Ajith in போக்குவரத்து

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வகுப்பு எஸ் -14 ரயில் மின்சாரம் இன்று கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது.

10.3 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்த ரயில் குறிப்பாக மலையக ரயில் மார்க்கங்களில் பயனிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் சாப்பாட்டு பெட்டியைத் தவிர, இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் மூன்று மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன.

சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து இந்த ரயில் மலையக ரயில் மார்க்கங்களில் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் திலாந்தா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் இதுபோன்ற ஒன்பது ரயில் பெட்டிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers