பொலிஸாரின் சுற்றிவளைப்பின் மூலம் கிடைக்கபெற்றுள்ள அபராத தொகை

Report Print Mubarak in போக்குவரத்து

அனுராதபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி குற்றச்செயல்களுக்கு உட்பட்டவர்களிடமிருந்து 1,559,000 ரூபாய் பணம் அபராதமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விஜித நவகமுவ இன்று தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் தொடக்கம் முதல் ஆகட்ஸ் மாதம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வரை கெகிராவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே 1,559,000 ரூபாய் அபராத பணம் கிடைக்கப் பெற்றுள்ளது.

நீதிமன்ற அபராதத்தின் மூலம் 787,500 ரூபாவும், பொலிஸ் குற்றப்பத்திரத்தின் மூலம் 771,500 ரூபாவும் இலாபமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிச்செல்லும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகை அதிகரிக்கப்பட்டதன் பின் குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் வழக்குகளின் மூலம் 534, 500 ரூபாவும் கிடைக்கப்பெற்றுள்ளது.

தலைக் கவசமின்றி மோட்டார் சைக்கிள் சென்றமை, அதிக வேகத்தில் வாகனம் செலுத்தியமை, வாகன உத்தரவு பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தியமை என்பன இக் குற்றச்செயல்களில் உள்ளடங்குகின்றன.

கெகிராவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.என்.கே.விஜித நவகமுவ உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களே மேற்படி சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...