இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை! அதிகரிக்கும் தண்டப்பணம்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

நாட்டிலுள்ள சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள அபராத தொகை போதுமானதாக இல்லாமையினால், ஒழுங்கு விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதன் காரணமாக அபராத தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பான சிபாரிசை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் சிபாரிசுக்கமைவாக பிணை சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பில் திருத்த சட்டமூல வரைவு பிரிவுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.