கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட நெரிசல்

Report Print Steephen Steephen in போக்குவரத்து

போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்தவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதால், விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 40 நாடுகளில் இருந்து 21 ஆயிரம் பேர் அண்மையில் இலங்கைக்கு வந்தனர்.

விமான நிலையத்தில் போதுமான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணயில் இப்படியான விசேட சந்தர்ப்பங்களில் விமான நிலையத்தில் பயணிகளால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.