அமுல்படுத்தப்படும் விசேட போக்குவரத்து திட்டம்

Report Print Ajith Ajith in போக்குவரத்து

கட்டபருவ ரஜமகா விகாரையின் பெரஹெரா ஊர்வலம் தெனியாய - அக்குரஸ்ஸ வீதியில் செல்லும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த ஊர்வலம் இன்று மற்றும் நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் படி குறித்த பகுதியூடாக பயணிப்போருக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸவிலிருந்து தெனியாயவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பிட்டபெத்தர சந்தியிலிருந்து பஸ்கொட வீதி வழியாக பஸ்கொட நகரத்தை நோக்கி பயணித்து, மாத்தறை - கொட்டப்போல வீதியில், ஊறுபொக்க, தலபலகண்ட ஊடாக தெனியாய சந்தியை அடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய வாகனங்கள் கல்டோல சந்தியிலிருந்து பெங்கமுவ வீதிக்கு திரும்பி, கொஸ்மோதர, கொரவ வழியாக தெனியாய நோக்கி செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers