விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமை எந்தவொரு பயணியும் அப்பிள் 15 அங்குல மெக்புக் புரோ மடிக்கணனியை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகள் தங்கள் கையில் வைத்திருக்கும் பொதியிலோ அல்லது ஏனைய பயண பொதியிலேயோ இந்த கணினியை கொண்டு செல்ல முடியாது.

கணினியின் பெட்டரியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால், பயணிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாத்திரமன்றி மேலும் சில சர்வதேச விமான சேவைகளும் அப்பிள் 15 அங்குல மெக்புக் புரோ மடிக்கணனியை கொண்டு செல்ல தடை விதித்துள்ளன.

அப்பிள் நிறுவனத்தின் 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணினியில் இவ்வாறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை 2015 - 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட அப்பிள் கணினியில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.