ரெயில்வே பணியாளர்களுடன் பேச்சு நடத்தப்படாது: ராஜாங்க அமைச்சர்

Report Print Ajith Ajith in போக்குவரத்து

ரெயில்வே பணியாளர்கள் தமது பணிப்புறக்கணிப்பை நிறுத்திக்கொள்ளும் வரை அவர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்படாது என்று போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ரெயில் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக இன்று இரவு முதல் பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

ரெயில்வே பணியாளர்கள் தமது பணிப்புறக்கணிப்பை அமைச்சுக்கு முன்னறிவித்தல் இல்லாமலேயே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டால் பணியாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்று அசோக் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பலர் பணிகளுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளபோதும் ஏனையவர்கள் அவர்களை பணிகளுக்கு திரும்பவிடாமல் தடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததும் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...