யாழ். மின்சார நிலைய வீதியில் விபத்து! மூவர் படுகாயம்

Report Print S.P. Thas S.P. Thas in போக்குவரத்து

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மின்சார நிலைய வீதியில் இன்று இரவு முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதாகவும் அதில் பயணித்த மூவரே படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த மூவரும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த சாரதி மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Latest Offers

loading...