சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் - இன்று அமுலாகும் நடைமுறை

Report Print Vethu Vethu in போக்குவரத்து

கொழும்பின் ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதி வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் தேர்தல் செயலகத்தில் இடம்பெறுவதால் ராஜகிரிய பகுதியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று காலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி மற்றும் பழைய கோட்டை வீதி என்பனவற்றில் இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆயுர்வேத சுற்றுவட்டம் முதல், வெலிக்கடை சந்திவரை, கொழும்பிலிருந்து வாகனங்கள் வெளியியேறுவது முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீஜயவர்தனபுர வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், முன்னர்போல பயணிக்கலாம்.

கொழும்பு நோக்கி பயணிக்கும் ஸ்ரீ ஜயவதர்தனபுர வீதியில் உள்ள 3 வழித்தடங்களில் இரண்டு வழித்தடங்கள் கொழும்புக்கு பயணிக்கும் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பழைய கோட்டை வீதியில், வெலிக்கடை சந்தி முதல், ஆயர்வேத சுற்றுவட்டம் வரையான பகுதியில் கொழும்பு நோக்கி வாகனங்கள் பயணிப்பது காலை 6 மணிமுதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்கு ஸ்ரீ ஜயவர்தன வீதியில் பயணிக்க முடியாது. எனவே, குறித்த வாகனங்கள் பழைய கோட்டை வீதியில் இடதுபக்கத்திலுள்ள இரண்டு வழித்தடங்களிலும் கொழும்பிலிருந்த வெளியேற முடியும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers