வவுனியாவில் சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் : பயணத்தினை தொடர்ந்தது ரஜரட்ட ரஜனி

Report Print Thileepan Thileepan in போக்குவரத்து

இரண்டு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றையதினம் வவுனியா புகையிரத நிலையத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதனையடுத்து 25ஆம் திகதி தொடக்கம் வவுனியாவில் தரித்து நின்ற ரஜரட்ட ரஜனி புகையிரதம் அதிகாலை 3.35 மணியளவில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.

அதிகாலையிலேயே ரயில்வே உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்ததுடன் பணிப்புறக்கணிப்பு காலப்பகுதியில் ஆசன முற்பதிவுகளை மேற்கொண்டிருந்தவர்கள் அவர்களது முற்பதிவுகளுக்கான பதிவுகளை இரத்து செய்ய சமூகமளித்திருத்தமையினையும் காணக்கூடியதாகவிருந்தது.

எனினும் கொழும்பிலிருந்து தபால் புகையிரதம் தவிர வேறு எந்த புகையிரதமும் இதுவரை வவுனியாவிற்கு வருகை தரவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்தே ரயில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.