சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்! கொழும்பில் சில வீதிகள் மூடப்படுகின்றன

Report Print Ajith Ajith in போக்குவரத்து

நீர்குழாய்ப் பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் கிராண்ட்பாஸ் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் சில வீதிகள் மூடப்படவுள்ளன.

இதன்படி தொட்டலங்க சந்தி, மஹாவத்த சந்தி ஊடாக மாதம்பிட்டிய வீதி,

ஓக்டோபர் 11ம் திகதி இரவு 10 மணியில் இருந்து ஒக்டோபர் 14ம் திகதி காலை 5 மணிவரை மூடப்படும்.

ஓக்டோபர் 18ம் திகதி இரவு 10 மணிமுதல் ஒக்டோபர் 21ம் திகதி காலை 5 மணிவரை மூடப்படும். ஓக்டோபர் 25ம் திகதி இரவு 10 மணிமுதல் ஒப்டோபர் 28 காலை 5 மணிவரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாதைகள் மூடப்படுகின்ற காரணத்தினால் வாகன சாரதிகள் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

வாசல வீதி சந்தி மற்றும் வோல் சந்தி ஊடாக சிறில் சி பெரேரா மாவத்தை,

ஒக்டோபர் 11ம் திகதி இரவு 10 மணிமுதல் ஒக்டோபர் 14 காலை 5 மணிவரையும், ஒக்டோபர் 18ம் திகதி இரவு 10 மணிமுதல் ஒக்டோபர் 21 காலை 5 மணிவரையும், ஒக்டோபர் 25ம் திகதி இரவு 10 மணிமுதல் ஒக்டோபர் 28 காலை 5 மணிவரை மூடப்படும்.

பலாமரச்சந்தி சந்தியில் இருந்து சென்ஜோசப் இடம்,

ஒக்டோபர் 12 இரவு 10 முதல் ஒக்டோபர் 13 காலை 5மணிவரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.