சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை! மேலும் பல நிறுவனங்கள் முன்வரக்கூடும்

Report Print Murali Murali in போக்குவரத்து

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம்.சி.நிமலசிறி இதனை தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த 17ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் முதலாம் திகதியியிலிருந்து சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில், விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளாந்த விமான சேவைகளை நடத்த அலையன்ஸ் எயர் நிறுவனம் முன்வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்வதற்கு, 50 நிமிடம் தொடக்கம் ஒரு மணித்தியாலமே தேவைப்படும்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் - சென்னை இடையே விமானங்களை சேவையில் ஈடுபடுத்த மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று நம்புகிறோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.