சவுதியில் கோர விபத்து! பரிதாபமாக பலியான இலங்கை இளைஞன்

Report Print S.P. Thas S.P. Thas in போக்குவரத்து

சவுதியில் மக்காஹ், ஹிரா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகல், பம்மண பகுதியை சேர்ந்த முஹமட் சலாஹுதீன் முஹமட் சதாம் (MSM Sadam) (24) என்ற இளைஞர் இன்று அதிகாலை மக்காஹ், ஹிரா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் சவுதி அல்மராய் கம்பனியில் தொழில் புரிந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலத்தை இலங்கை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்துப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.