டிசம்பர் 1 ஆம் திகதி முதல் ரயிலில் பிச்சை எடுக்க தடை

Report Print Steephen Steephen in போக்குவரத்து
245Shares

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ரயில்களில் பிச்சை எடுப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

தடையை மீறி ரயில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் என ரயில் சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகரங்கள் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.