ரயில் போக்குவரத்தில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம்

Report Print Malar in போக்குவரத்து

ரயில் போக்குவரத்துக்காக ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பெற்று கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில் சேவை முகாமைத்துவத்திற்காக, தொலைப்பேசி மூலம் தகவல்களைப் பெற்று, கையெழுத்து மூலம் ஆவணப்படுத்தும் முறைமையே சில பகுதிகளில் உள்ளது.

இந்த நிலையில், சில பகுதிகளுக்கு ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை வழங்கி, அதனூடாக கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் போக்குவரத்தை சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.