07ஆம் திகதி மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலைய வீதி

Report Print Banu in போக்குவரத்து

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் ஆடியம்பலம மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையிலான வீதியின் ஒரு மருங்கை தற்காலிகமாக மூட நேர்ந்துள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி மாலை 06 மணி தொடக்கம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடியம்பலம மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையிலான வீதியில் குறித்த தினங்களில் நீர் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருவதனாலே குறித்த போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை, கிம்புலபிட்டிய பக்கமாக நைகந்த ஊடாக விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் விமானப் பயணிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.