ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை விஸ்தரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை, கட்டார் விமான சேவையுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கான விமான பயணத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பிக்கவுள்ளது. இதன்மூலம் மேலும் 12 நகரங்களுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பிக்கவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு மேலதிகமாக தெற்கு அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் 18 விமான நிலையங்களுக்கு நேரடி பயணங்களை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தயாராகி வருகிறது.

இதன்காரணமாக உலகளாவிய ரீதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமான பயணங்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரிக்கப்படவுள்ளது என எதிர்பார்க்கப்படுவதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...