பண்டிகை காலத்தை முன்னிட்டு சேவையில் விசேட சொகுசு புகையிரதம்

Report Print Sujitha Sri in போக்குவரத்து

கொழும்பிலிருந்து கண்டிக்கான புகையிரத போக்குவரத்து சேவைக்கு இன்றைய தினம் சொகுசு புகையிரதமொன்று இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதம் இன்று காலை ஒன்பது மணியளவில் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த புகையிரதமானது முற்பகல் 11.30 மணியளவில் கண்டியை அடையவுள்ளதுடன், கம்பஹா மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களில் மாத்திரமே தரித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசேட சொகுசு புகையிரதமானது கண்டியிலிருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் கொழும்பை வந்தடையவுள்ளது.

பண்டிகை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட புகையிரத சேவையானது எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

Latest Offers