மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

Report Print Banu in போக்குவரத்து

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இன்று புறப்படவிருந்த புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மாலை மற்றும் இரவு வேளைகளில் பயணிக்கவிருந்த புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த இரு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதனாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம் காரணமாகவும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Offers

loading...