உடரட மெனிக்கே தடம் புரள்வு : மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

Report Print Thirumal Thirumal in போக்குவரத்து
75Shares

கொழும்பு - பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், இன்று மாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிப்படைந்துள்ளன.

கொழும்பு,கோட்டையிலிருந்து பதுளை புகையிரதம் நிலையம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற உடரட மெனிக்கே புகையிரதமே இவ்வாறு வட்டகொடை புகையிரத நிலையத்தில் வைத்து தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.

அதன்பின் மற்றுமொரு புகையிரதத்தின் மூலம் சுமார் இரண்டு மணித்தியாலயங்களின் பின் பயணிகள் தமது பயணங்களை மேற்கொண்டனர்.

இந்நிலையில், புகையிரத பாதையை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், அதன்பின் மலையக புகையிரத சேவைகள் வழமைப்போல் செயற்படும் என புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.