ஸ்ரீலங்கன் விமானத்தில் தண்ணீர் போத்தல் பயன்படுத்த தடை

Report Print Vethu Vethu in போக்குவரத்து
1051Shares

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் சிறிய நீர் போத்தல் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கவனம் செலுத்தியுள்ளார்.

டுபாய் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்படும் தண்ணீர் போத்தல்களை உடனடியாக தடை செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தண்ணீர் போத்தல் இலங்கையில் தயாரிக்கப்படவில்லை. எனினும் நீருடன் சேர்ந்தே டுபாய் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு 3 மில்லியன் தண்ணீர் போத்தல்களை ஸ்ரீலங்கன் நிறுவனம் பெற்றுக் கொள்கின்றது. ஒரு போத்தல் தண்ணீரின் விலை 7.80 அமெரிக்க டொலராகும்.

வருடத்திற்கு இரண்டு முறை 3 மில்லியன் தண்ணீர் போத்தல்களை ஸ்ரீலங்கன் நிறுவனம் கொள்வனவு செய்கிறது.

புதிய அரசாங்கம் சுற்று சூழலுக்கு நெருக்கமான கொள்கையை பிரகடனப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பயன்பாட்டை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உள்ளூர் நிறுவனத்திடம் பொருத்தமான சிறிய போத்தல் மற்றும் நீரை கொள்வனவு செய்து பயணிகளிடம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் நிறுவனம் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களிலும் உள்ளூர் உற்பத்திற்கு முதன்மை இடத்தை வழங்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.