வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் விஷேட நடவடிக்கை: 36 சாரதிகளுக்கு தண்டப்பணம்

Report Print Theesan in போக்குவரத்து

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விஷேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய 36 சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 6 பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாரத்திற்கு ஒரு நாள் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் வவுனியா ஏ9 வீதியில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அபாயமான முறையில் வாகனம் ஓட்டியமை, வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தியமை, போதையில் வாகனம் ஓட்டியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 36 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் அவற்றில் 6 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏனையோருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக தெளிவூட்டல்களையும் பொலிஸார் இதன்போது வழங்கியிருந்தனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும், விபத்துக்களை குறைக்கவும், சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளை பின்பற்றி சிறப்பான பயணத்தை மேற்கொள்ளவுமே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...