பிரித்தானியா கிழக்கு லண்டன் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்படுவது நிறுத்தம்

Report Print Malar in போக்குவரத்து

பிரித்தானிய விமான படையினர் இன்று ஹீத்ரு விமான நிலையத்தின் வான் பரப்பை பயன்படுத்தியதால், விமான நிலையத்திற்கு வந்த டசின் கணக்கான விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

குறைந்த 5 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் மற்றும் ஒரு வர்ஜீன் அட்லான்டின் விமானம் என்பன வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் அதிக வேலை பளு நிறைந்த கிழக்கு லண்டன் விமான நிலையத்தில் இன்று நடந்த இந்த சம்பவம் திட்டமிடப்படாத ஒன்று என ஹீத்ரு விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு சம்பவம் இதற்கு காரணமாக இருக்கலாம் என விமானிகள் கூறியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விமான நிலையம் அதனை நிராகரித்துள்ளது.

ஹீத்ரு வான் பரப்பில் ஒரு பகுதியில் விமானப் பயணத்திற்காக விமானப்படையினர் கோரியதன் காரணமாக இன்று காலை குறுகிய காலத்திற்கு விமானங்கள் தரையிறக்கப்படுவது நிறுத்தப்பட்டதாகவும், அந்தவகையில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் ஹீத்ரு விமான நிலையத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

Latest Offers